மமதா பானர்ஜி
மமதா பானர்ஜி

முறையாக நடந்துகொள்ளுங்கள் - பிரதமர் பேச்சுக்கு மமதா காட்டம்

மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, “பிரதமர் ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும்” என்று காட்டமாகக் கூறியிருக்கிறார்.

பரபரப்பான இந்தப் பேச்சுக்குக் காரணம், பிரதமர் மோடியின் இன்றைய காலை கூட்டப் பேச்சுதான்!

மேற்குவங்கத்தில் சேத்திர பஞ்சாயத்து ராஜ் பரிஷத்தின் கூட்டத்தில் காணொலி வாயிலாக காலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், மமதா கட்சிக்காரர்கள் வாக்காளர்களை மிரட்டி, அவர்களை நரகத்துக்கு அனுப்பவும் செய்தார்கள் என்று குறிப்பிட்டார்.

ஜனநாயகக் காவலர்கள் என தங்களைக் கூறிக்கொள்கிறார்கள்; ஆனால் அவர்கள்தான் குண்டர்களை ஒப்பந்தம் செய்துகொண்டு தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றினார்கள் என்றும் மோடி கூறினார்.

மோடிக்குப் பதிலளித்து ஊடகங்களிடம் பேசியுள்ள மேற்குவங்க முதலமைச்சர், வங்காளத்தில் உங்கள் ஆட்கள் 16-17 பேரைக் கொலை செய்திருக்கிறார்கள் என்று கூறினார். அவர் என்ன பேசுகிறார்; ஆதாரம் இல்லாமல் அவர் பேசிக்கொண்டு இருக்கிறார்; நாடு அழியவேண்டும் என்றும் பொதுமக்கள் கஷ்டப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். பாஜகதான் ஈடிணையில்லாத முட்டாள்தனமானது என்று பதிலுக்கு காட்டமாகக் கூறியுள்ளார்.

ஊழலைப் பற்றி பிரதமரால் பேசமுடியாது; ஏனென்றால், அவர் தன்னைச் சுற்றி பிரதமர் நிதியம், ரஃபேல் ஊழல், பணமதிப்பு இழப்பு என பல பிரச்னைகளை வைத்துக்கொண்டிருக்கிறார் என்றும் மமதா இடித்துப்பேசினார்.

முதலில் பாஜக ஆளும் மாநிலங்களை கவனியுங்கள்; மேற்குவங்கம் அமைதியாகத்தான் இருக்கிறது; உங்கள் நோக்கம் அதைச் சிதைப்பதாக இருந்தால் நாட்டை எப்படி நடத்துவீர்கள் என்று பார்க்கலாம்; இதையே நீங்கள் தொடருவீர்களானால் உங்களுடைய பாணியை முடிவுக்குக் கொண்டுவரும் இடமாக வங்காளம் இருக்கும் என்றும் மமதா பேசினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com