மருத்துவமனையில் மமதா பானர்ஜி
மருத்துவமனையில் மமதா பானர்ஜி

மம்தா பானர்ஜிக்கு என்ன ஆச்சு?நெற்றியில் வெட்டுக் காயம்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி நெற்றியில் வெட்டுக் காயத்துடன் முகத்தில் இரத்தம் வழிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் கீழே விழுந்ததில் அவருக்கு மண்டையில் அடிபட்டு, நெற்றியில் வெட்டுக் காயம் ஏற்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச்செல்லப்பட்டார் என்று அவரின் சகோதரர் கார்த்தி பானர்ஜி வங்காள ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். 

வெளியே போய்விட்டு காலிக்கட்டில் உள்ள வீட்டுக்கு வந்த மம்தா காயமடைந்தார் என்றும் அவர் கூறினார். 

மமதாவின் சகோதரர் மகன் அபிசேக் பானர்ஜி அவரை கொல்கத்தா அரசு எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு மூத்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துவருகின்றனர்.  

மமதாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அவர் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் படங்களை தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, அவருக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com