வரலாற்றிலேயே திருப்பதி கோயிலுக்கு 121 கிலோ தங்க நகை வழங்கிய பக்தர்!

வரலாற்றிலேயே திருப்பதி கோயிலுக்கு 121 கிலோ தங்க நகை வழங்கிய பக்தர்!
Published on: 

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் காணிக்கையாக வழங்கியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வர்த்தமான் ஜெயின் 'ஆக்சஸ் ஹெல்த்கேர்' நிறுவனத்தின் இணை நிறுவனர்-துணைத் தலைவராக உள்ளார். இவர் ஆக்சஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் 60% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்றதன் மூலமாக ரூ.6000 கோடியைப் பெற்றுள்ளதாகவும், அதிலிருந்து ரூ.160 கோடியை நகைகளாக்கி, திருப்பதி ஏழுமலையானுக்குக் காணிக்கையாக வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் திருப்பதி தேவஸ்தானத்திற்குத் தொடர்ந்து நன்கொடைகள் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே இவர், மின்சாரப் பேருந்துகள், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் மேம்பாட்டிற்காக ரூ. 7 கோடி, தேவஸ்தான கோசாலையில் கால்நடைத் தீவனக் கலவை ஆலை அமைப்பதற்காக ரூ. 5 கோடி, உண்டியல் காணிக்கை நாணயங்களை எண்ணும் இயந்திரத்திற்காக ரூ.1 கோடி உட்பட்ட காணிக்கைகளை வழங்கியுள்ளார்.

இன்று நடைபெற்ற நிகழ்வில், ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில், தொழிலதிபர் வர்த்தமான் ஜெயின், 45 வகையான தங்க நகைகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் காணிக்கையாக ஒப்படைத்தார்.

திருப்பதி தேவஸ்தான வரலாற்றிலேயே, இவ்வளவு அதிகமான தங்க நகைகளை காணிக்கையாகக் கொடுத்த முதல் நபர் இவர்தான் என்று கூறப்படுகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram