மறைந்தார் மன்மோகன் சிங்!

Manmohan singh
மன்மோகன் சிங்
Published on

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் இன்று இரவு காலமானார்.

மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த அவர், இடையிடையே வீட்டில் இருந்தபடியே சிகிச்சையைத் தொடர்ந்தார்.

இந்நிலையில் இன்று இரவு 8: 06 மணி அளவில் டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்- எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சுயநினைவில்லாமல் அங்கு சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி 92 வயதான மன்மோகன் 9.51மணிக்கு மரணம் அடைந்தார்.

மன்மோகனின் மறைவுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களும் இந்தியாவின் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com