தீபாவளிவரை யு.பி.ஐ. பரிவர்த்தனை கட்டண முறை தள்ளிவைப்பு!

UPI Transaction
யு.பி.ஐ. பரிவர்த்தனை
Published on: 

யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கான கட்டண வசூல் முறையை ஒத்திவைப்பதாக இந்திய தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்கு பிறகு யு.பி.ஐ செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2000-க்கும் கூடுதலான வணிகப் பயன்பாட்டுக்கான பரிவர்த்தனைகளுக்கு அவற்றின் மொத்த மதிப்பில் 0.40 விழுக்காடும், அதிகபட்சமாக ரூ.300-ம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அண்மையில் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஆயுதபூஜை, தசரா, தீபாவளி என்று அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கான கட்டண வசூல் முறை நடைமுறைக்கு வந்தால், வணிகர்களுக்கு இழப்பு ஏற்படும் என்று வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பண்டிகைக் காலம் முடியும்வரை இந்த கட்டண வசூல் நடைமுறையை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர்கள் முன்வைத்தனர்.

UPI MDR on transaction
யு.பி.ஐ. கட்டண வசூல் முறை ஒத்திவைப்பு

அதை ஏற்று, தீபாவளிப் பண்டிகை முடியும்வரை, யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கான கட்டண வசூல் ஒத்திவைக்கப்படும் என்றும், நடைமுறைக்கு வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com