வான்விராய் கர்லோகி
வான்விராய் கர்லோகி

இஸ்ரேலில் சிக்கிய இந்திய எம்.பி. உட்பட 27 பேர் மீட்பு!

மேகாலயா மாநிலத்தின் ஒரே மாநிலங்களவை உறுப்பினரான வான்விராய் கர்லோகி தன் குடும்பத்தினருடன் ஜெருசலேம் நகருக்கு புனிதப் பயணம் சென்றனர். அவர்களின் பயணத்தின்போது இஸ்ரேல் -பாலஸ்தீனம் மோதல் வெடித்தது. இஸ்ரேலின் மேற்குக் கரையில் உள்ள பெத்லகேம் நகரிலிருந்து இந்தியா திரும்பமுடியாமல் எம்.பி.யும் அவரின் குடும்பத்தினரும் தவித்தனர். இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்களை பத்திரமாக வெளியே அழைத்துவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  எம்பி உட்பட்ட 27 பேரும் பாதுகாப்பாக இஸ்ரேல் எல்லையைக் கடந்து எகிப்து நாட்டுப் பகுதிக்குச் சென்றனர்.

இதுதொடர்பாக மேகாலாயா முதலமைச்சர் கான்ராட சமோ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வெளியுறவு அமைச்சகம், இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகத் தரப்பினரால் மேகாலயா மாநிலத்தைச் சேர்த்தவர்கள் மீட்கப்பட்டு எகிப்து சென்றடைந்துள்ளனர் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com