பிரதமர் மோடியுடன் சுரேஷ் கோபி
பிரதமர் மோடியுடன் சுரேஷ் கோபி

அமைச்சர் பதவி: சுரேஷ் கோபி பல்டி!

மத்திய இணையமைச்சர் பதவியிலிருந்து சுரேஷ் கோபி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். அவர் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய இணையமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, படத்தில் நடிக்க இருப்பதால், அமைச்சர் பதவியில் விருப்பம் இல்லை என்றும், பதவி விலகுவது குறித்து கட்சித் தலைமையிடம் பேசியுள்ளதாகவும் மலையாள ஊடகமான ஆன்மனோரம்மாவுக்கு சுரேஷ் கோபி பேட்டியளித்ததாக இன்று காலை செய்தி வெளியாகின.

இந்த நிலையில், ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து சுரேஷ் கோபி, தன்னுடைய எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

“நான் அமைச்சரவையிலிருந்து விலகவுள்ளதாக தவறான செய்தி பரவி வருகின்றன. இது முற்றிலும் தவறானது. மோடியின் தலைமையின் கீழ் கேரளத்தின் வளர்ச்சிக்காக பணியாற்ற உறுதியாக இருக்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com