பிரதமர் மோடி
பிரதமர் மோடி

3ஆவது முறையாக பிரதமரானார் மோடி!

பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக தற்போது பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி புதிய எம்.பி.க்களின் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக மோடி ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினா். அதன்படி ஞாயிற்றுக்கிழமை மாலை பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தற்போது நாட்டின் பிரதமராக பிரதமர் நரேந்திர மோடி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் பிரதமராக பதவியேற்றுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 3 முறை பிரதமராக இருந்த ஜவாஹர்லால்

பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர். மத்திய அமைச்சராக அமித் ஷா (குஜராத்), ராஜ்நாத் சிங் (உத்தரப் பிரதேசம்), நிதின் கட்காரி (மகாராஷ்டிரா), ஜே.பி. நட்டா (குஜராத்), சிவராஜ்சிங் சவுகான் (மத்திய பிரதேஷ்), நிர்மலா சீதாரமன் (கர்நாடகா), ஜெய்சங்கர் (குஜராத்), மனோகர் லால் (அரியானா), எச்.டி. குமாரசாமி (கர்நாடகா), பியூஸ் கோயல் (மகாராஷ்டிரா), தர்மேந்திர பிரதான் (மத்திய பிரதேசம்), ஜிதன்ராம் மஞ்சி (பிகார்), ராஜிவ் ரஞ்சின் சிங் (பிகார்), சர்பானந்த சோனோவால் (அசாம்), வீரேந்திர குமார் (மத்திய பிரதேசம்), ராம்மோகன் நாயுடு (தெலுங்கானா), பிரகலாத் ஜோஷி (கர்நாடகம்), ஜூவல் ஓரம் (ஒடிசா), கிரி ராஜ் சிங்,அஸ்வினி வைஷ்ணவ் (ஒடிசா),  ஜோதிச் ஆதித்யா சிந்தியா, பூபேந்தர் யாதவ், கஜேந்திர சிங் ஷெகாவத், அன்னபூர்ணா தேவி, கிரிண் ராஜிஜூ, ஹர்தீப் சிங் பூரி,கிஷன் ரெட்டி, சிராக் பஸ்வான், அர்ஜூன் ராம் மேக்வால், பிரதப் ராவ் ஜாதவ்,ஜெயந்த் செளத்ரி, ஜிதின் பிரசாதா, ஸ்ரீபத் யசோ நாயக், பங்கஜ் சவுத்ரி, கிஷான்பால் குர்ஜர் (அரியானா), ராம்தாஸ் அத்வாலே, ராம்நாத் தாக்கூர், நித்தியானந்த ராய், அனுப்பிரியா பட்டேல், வீரண்ண சோமன்னா, சந்திர சேகர் பெம்மாசானி ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கும் குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இன்று பதவியேற்கும் அமைச்சர்களுக்கு நாளை இலாகாக்கள் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com