மும்பை குண்டுவெடிப்பு - 20 ஆண்டுகள் கழித்து 12 முஸ்லிம்கள் விடுதலை!

மும்பை உயர்நீதிமன்றம்
மும்பை உயர்நீதிமன்றம்
Published on

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், சிறைவாசம் அனுபவித்துவந்த 12 முசுலிம்கள் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 2006ஆம் ஆண்டு இதே மாதத்தில் 11ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில், அடுத்தடுத்து ஏழு இடங்களில் குண்டுகள் வெடித்தன.

மொத்தம் 11 நிமிடங்களில் நடந்துமுடிந்துவிட்ட அந்தக் கொடூர சம்பவங்களில் அப்பாவிகள்189 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம், 2015இல் ஐந்து பேருக்கு மரண தண்டனையும் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. 

அதை எதிர்த்து அனைவரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 

இதனிடையே, இதில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கமல் அன்சாரி கொரோனா காலத்தில் இறந்துவிட்டார். 

இந்நிலையில் இன்று இவ்வழக்கில் சிறப்பு அமர்வு, 12 பேர் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது எனக் கூறி, அனைவரையும் விடுதலைசெய்தது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com