முரசு புயல்: மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது!

Murasu storm
'முரசு' புயல்
Published on: 

'முரசு' புயல் இன்று அதிகாலையில் ஆந்திராவின் ஒங்கோலுக்கு அருகே தீவிர காற்றுடன் கரையைக் கடந்தது.

தீவிரப் புயலான 'முரசு' இன்று காலை 3:30 மணி முதல் 5:30 மணிக்குள் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையில், ஒங்கோலுக்கு அருகில் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல் கரையைக் கடந்தபோது, காற்றின் வேகம் மணிக்கு 100 கி.மீ. முதல் 110 கி.மீ. வரையிலும், அவ்வப்போது 120 கி.மீ. வேகத்திலும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

​புயல் காரணமாக கடலோர மாவட்டங்களான பிரகாசம், பாபட்லா, கிருஷ்ணா, நெல்லூர் உட்பட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

பலத்த காற்று காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் அப்பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

காற்றின் வேகம் காரணமாக, சென்னை, ஆந்திர மாநிலங்களில் இருந்து புறப்படும் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram