ஆபரேஷன் சிந்தூரில் வீரமரணமடைந்த 6 வீரர்களின் பெயர்கள் வெளியீடு!

தியாகச் சக்கரத்தில் அவர்களின் பெயர்கள் பொறிக்கப்படுகிறது
released the details of soldiers died in operation sindoor
வீரமரணமடைந்த வீரர்களின் தகவல்கள் வெளியீடு
Published on: 

கடந்த ஆண்டு பெகல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக ஆபரேசன் சிந்தூரை இந்தியா கையில் எடுத்தது. அப்போது, 6 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

அவர்களின் பெயர்களை புதுதில்லியில் உள்ள தியாகச் சக்கரத்தில் பொறிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது 16 வட்ட வடிவ, கல் சுவர்களைக் கொண்டுள்ளது.

சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டிற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த ஒவ்வொரு வீரரின் பெயர், பதவி, படைப்பிரிவு ஆகியவை இந்தச் சுவர்களின் செங்கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன.

தியாகச் சக்கரத்தில் உள்ள செங்கற்களில் ஆபரேசன் சிந்தூரில் வீரமரணமடைந்த 6 வீரர்களின் பெயர்களைப் பொறிக்கப்படுவதன் மூலம் நிரந்தரமாக அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படும் என்றும், அவர்களின் தியாகம் இந்த தேசத்தில் என்றும் நிலைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

வீரமரணம் அடைந்தவர்களில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஐந்து வீரர்களும், இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

கடந்த 2025ஆம் ஆண்டில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கைகளில் இறந்த அனைத்து ராணுவ வீரர்களின் பட்டியலுடன் இவர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com