ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்
ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்

24 மணி நேரப் போராட்டம்- நாடு முழுவதும் மருத்துவ சேவை பாதிப்பு!

Published on

கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 6 மணிக்குத் தொடங்கிய போராட்டம் நாளை ஞாயிறு காலை 6 மணிக்கு நிறைவடையும்.

அவசர உயிராபத்து சிகிச்சைகளில் மட்டும் மருத்துவர்கள் ஈடுபடுவார்கள் என்று இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.

மருத்துவர்களின் போராட்டத்தால் அரசு மருத்துவமனைகளில் குறிப்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வாரக் கடைசியில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. வழக்கமாக வருபவர்களை வரும் திங்களன்று வருமாறு கூறி அனுப்பிவைத்துக் கொண்டிருக்கின்றனர்.   

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com