'48 மணி நேரத்தில் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்... இல்லையென்றால்...'

Abhijeet Dipke - Gyanesh Kumar
அபிஜீத் தீப்கே - ஞானேஷ் குமார்
Published on

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணி நேரத்தில் பதவிவிலக வேண்டும் என்று கரப்பான் ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணி நேரத்தில் பதவி விலகவில்லையெனில், நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று கரப்பான் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அபிஜீத் தீப்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"நேற்று, தேர்தல் ஆணையம் குறித்து வெளியானது அறிக்கையின் மூலம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இந்த நாட்டின் மிகப் பெரிய துரோகி என்பது தெரியவந்துள்ளது.

ஞானேஷ் குமார் இந்த நாட்டின் மிகப் பெரிய தேசவிரோதி, அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். அவர் இந்தியாவின் ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்துள்ளார்.

எஸ்.ஐ.ஆர். பணிகள் மூலம் மேற்கு வங்கத்தில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் தொகுதியில் 50,000 வாக்குகள் நீக்கப்பட்டு அவர் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினின் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டு அவர் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

ஞானேஷ்வர் குமார் 48 மணி நேரத்தில் பதவி விலகவில்லையெனில், நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் " என்று அபிஜீத் தீப்கே கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com