இந்தியா – பாரத்: என்.சி.இ.ஆர்.டி பதில்!

பாடப்புத்தங்களில் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என மாற்ற பரிந்துரை.
பாடப்புத்தங்களில் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என மாற்ற பரிந்துரை.
Published on

பள்ளிப் பாடப் புத்தங்களில் இந்தியா என்ற பெயருக்குப் பதிலாக பாரத் என்று பெயர் மாற்றுவதற்கு என்.சி.இ.ஆர்.டி அமைத்த உயர்மட்டக் குழு பரிந்துரைதுள்ளது.

மத்திய பா.ஜ.க. அரசு இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், அனைத்து பாடப்புத்தகங்களின் பாடத்திட்டத்தை திருத்தி அமைக்க தேசிய கல்வி ஆராய்ச்சி – பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) அமைத்த சமூக அறிவியல் குழு, பள்ளிப் பாடப்புத்தங்களில் இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்ற பரிந்துரை செய்துள்ளது. இந்த உயர்மட்ட குழு அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று என்.சி.இ.ஆர்.டி தலைவர் தினேஷ் சக்லானி பதில் அளித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com