மே 3ஆம் தேதி நீட் தேர்வு… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

நீட் தேர்வு (மாதிரிப்படம்)
நீட் தேர்வு (மாதிரிப்படம்)
Published on

மே 3ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.

மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும். நடப்பாண்டு நீட் நுழைவுத்தேர்வு வரும் மே 3ஆம் தேதி நடைபெற உள்ளது.

தேர்வு எழுத தகுதியுள்ளவர்கள் இன்று (பிப்.8) முதல் மார்ச் 8ஆம் தேதி வரை https://neet.nta.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் . மே 3ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நீட் நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com