இந்தியா

இரயில் பயணச்சீட்டுகளை இரத்து செய்வதில் தற்போதைய நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வரும் ஏப்ரல் முதல் தேதி முதல் இவை நடைமுறைக்கு வருகின்றன.
அதன்படி, இரயில் சீட்டுகளை, வண்டி புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் இரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது.
எட்டு மணி நேரத்துக்கு முன்பிருந்து 24 மணி நேரத்துக்குள் இரத்து செய்தால் 50% தொகை மட்டுமே திருப்பித் தரப்படும்.
வண்டி புறப்படுவதற்கு முன்னர் 72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் சீட்டை இரத்து செய்தால் இரத்து கட்டணம் தவிர, பயணக் கட்டணத்திலும் 25% பிடித்தம் செய்து தரப்படும்.
வண்டி புறப்படுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்னர் இரத்து செய்தால் மட்டுமே முழு கட்டணம் திருப்பித் தரப்படும்.