ஒரே வாரத்தில் பிறந்த 9 இரட்டையர்கள்… அரசு மருத்துவமனையில் நடந்த அதிசயம்!

9 twins in a single week
இரட்டைக் குழந்தைகள்
Published on: 

அரசு மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 9 இரட்டை குழந்தைகள் பிறந்த நிகழ்வு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் பாலகாட் மாவட்டம் மாவோயிஸ்ட்டுகள் நிறைந்த பகுதி. இந்த மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 28 ஆம் தேதியிலிருந்து கடந்த நவம்பர் 3 ஆம் தேதி வரை 9 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 6 இரட்டையர்கள் 72 மணிநேரத்திற்குள் பிறந்துள்ளனர். எடை குறைவாக இருந்தால் ஒரு பெண் குழந்தை மட்டும் உயிரிழந்துள்ளது. மீதமுள்ள குழந்தைகள் அனைத்தும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் நிலாய் ஜெயின், “கடந்த முப்பது வருடத்தில் அனுபத்தில் இப்படி ஒரு அதிசய நிகழ்வை கண்டதில்லை” என கூறியுள்ளார்.

9 இரட்டைக் குழந்தை ஜோடிகளும் ஒன்று ஆண், இன்னொன்று பெண் என பிறந்துள்ளதும் இன்னொரு ஆச்சரியமாகும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com