என்ஐஆர்எப் தரவரிசை பட்டியல்: சென்னை ஐஐடி மீண்டும் முதலிடம்!

ஐஐடி சென்னை
ஐஐடி சென்னை
Published on

மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலுடன் கூடிய தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்) ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனங்களையும் அதன் கற்றல், கற்பித்தல் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில் முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவுகள், புதுமை நடைமுறை உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்து பட்டியலிடப்படுகிறது.

அதன்படி, கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து இந்த தரவரிசை பட்டியல் வெளியாகிறது. இதில் ஒட்டுமொத்தம், பல்கலைக்கழகம், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, பார்மசி, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடக்கலை, வேளாண்மை, புதுமை, திறந்தநிலை பல்கலைக்கழகம், திறன் பல்கலைக்கழகம், மாநில பொது பல்கலைக்கழகம் என 16 பிரிவுகளின்கீழ் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்படும்.

அதன்படி, ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து 7ஆவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்திருக்கிறது. இரண்டாவது இடத்தில் பெங்களூரு ஐஐடி, மூன்றாவது இடத்தில் மும்பை ஐஐடி இடம்பிடித்துள்ளது.

பல்கலைக்கழகங்களில், இந்திய அறிவியல் மையம் – பெங்களூரு முதலிடத்தையும், ஜவஹர்லால் நேரு பல்கலை. – டெல்லி இரண்டாவது இடத்தையும், மணிப்பால் உயர் கல்வி அகாடமி – மணிப்பால் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

அதேபோல் கல்லூரியில், இந்து கல்லூரி – டெல்லி முதலிடத்தையும், மிராண்டா ஹவுஸ் – டெல்லி இரண்டாவது இடத்தையும், ஹான்ஸ் ராஜ் கல்லூரி – டெல்லி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com