பிரச்சாரத்தின்போது மயங்கி விழுந்த மைய அமைச்சர் நிதின் கட்கரி!

பிரச்சாரத்தின்போது மயங்கி விழுந்த மைய அமைச்சர் நிதின் கட்கரி!

மகாராஷ்டிரத்தில் மக்களவைப் பிரச்சாரத்தின்போது மேடையில் மயங்கி விழுந்தார், மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி. 

மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டம், புசாத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் சிறிது நேரத்துக்கு முன்னர் அவர் பேசிக்கொண்டிருந்தார். பேச்சின் இடையிலேயே அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். 

உடனடியாக மேடையில் இருந்தவர்கள் அவரைத் தூக்கிச்சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். 

இப்போது அவர் நலமுடன் இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

முன்னதாக, அந்தத் தொகுதியில் போட்டியிடும் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை அணியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டீலை ஆதரித்து கட்கரி பேசினார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com