10ஆவது முறையாக முதல்வர்… நிதிஷ்குமார் பதவியேற்றார்!

பீகார் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார்
பீகார் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார்
Published on

பீகார் மாநில முதலமைச்சராக 10ஆவது முறையாக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பதவியேற்றார்.

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக- ஜேடியூவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்து கொண்டது.

பாஜக- ஜேடியூ கூட்டணியின் முதலமைச்சராக மீண்டும் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், பீகார் தலைநகர் பாட்னா காந்தி மைதானத்தில் இன்று நடபெற்ற நிகழ்ச்சியில் பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றார். அவருடன் 19 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

10-வது முறையாக பீகார் முதல்வர்..

பீகார் மாநிலத்தின் முதல்வராக 10ஆவது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார்.

1. மார்ச் 3, 2000 – மார்ச் 10, 2000

2. நவம்பர் 24, 2005 – மே 20, 2014

3. பிப்ரவரி 22, 2015 – நவம்பர் 20, 2015

4. நவம்பர் 20, 2015 – ஜூலை 26, 2017

5. ஜூலை 27, 2017 – நவம்பர் 16, 2020

6. நவம்பர் 16, 2020 – ஆகஸ்ட் 9, 2022

7. ஆகஸ்ட் 10, 2022 – ஜனவரி 28, 2024

8. ஜனவரி 28, 2024 – ஜனவரி 30, 2024

9. ஜனவரி 31, 2024 – நவம்பர் 19, 202510

10. 10-வது முறை நவம்பர் 20,2005 முதல்

ஒருமுறை கூட எம்.எல்.ஏ. இல்லை

பீகாரில் 10ஆவது முறையாக முதல்வராகும் நிதிஷ்குமார் 1995-க்குப் பின்னர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com