தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரம் இல்லை! – மத்திய கல்வி அமைச்சர்

நீட் தேர்வில் வினாத் தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டை நிராகரித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏ. என்.ஐ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “தேசிய தேர்வு முகமை மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அது மிகவும் நம்பகமான அமைப்பாகும். நீட் தேர்வில் வினாத் தாள் கசிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதன் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். எந்த ஒரு மாணவரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம்” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com