இணையம் இல்லாத யுபிஐ பரிவர்த்தனை... வருகிறது புதிய முறை!

Offline UPI
ஆஃப்லைன் யூ.பி.ஐ.
Published on

இணைய வசதி இல்லாத இடங்களிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்வதற்காக,  என்.பி.சி.ஐ. 'ஆஃப்லைன் யூ.பி.ஐ.'  என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் ஸ்மார்ட் போன் இல்லாதவர்களும், இணைய சேவை இல்லாத கிராமப்புறங்களில் வாழ்பவர்களும் தடையின்றி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

இதில், *99# USSD குறியீடு பயன்படுத்தியும், UPI 123PAY  என்ற குரல் வழி அல்லது மிஸ்டு கால் சேவையை கொண்டும் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

மேலும், என்.எஃப்.சி. தொழில்நுட்பம் கொண்ட 'யு.பி.ஐ லைட் எக்ஸ்'  ஆகியவற்றின் மூலம் ‘டேப் டூ பே’ போன்ற வழிகளைப் பயன்படுத்தி, கடைகளிலும், வியாபாரிகளிடமும் மிக எளிதாகக் கட்டணங்களைச் செலுத்த முடியும்.

சிக்னல் குறைபாடுகளால் பணப்பரிவர்த்தனை தடையிடுவதைத் தவிர்க்கவும், நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்குள் கொண்டுவரவும் இந்த 'ஆஃப்லைன் யூ.பி.ஐ.' வசதியைக் கொண்டுவர என்.பி.சி.ஐ. திட்டமிட்டு வருகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com