நீட் வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 600 நிபுணர்களை தேசிய தேர்வு முகமை நீக்கியுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.
புதிய மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டார்.
மேலும், நீட் தேர்வை நடத்திவரும் தேசிய தேர்வு முகமையைச் சீர்திருத்த இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவநர் நந்தன் நிலகேனி தலைமையில், இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத், ஐ.ஐ.டி. மெட்ராஸ் இயக்குநர் காமகோடி உட்பட்டவர்கள் அடங்கிய ஒரு உயர்மட்டக் குழுவை பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்தக் குழுவின் தலைமையில், பல்வேறு நடவடிக்கைகளை மத்திய கல்வி அமைச்சகம் எடுத்து வருகிறது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் நடவடிக்கைகள்:
1) நீட் வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்ட 600 நிபுணர்களை நீக்கி, புதிய நிபுணர்களை தேசிய தேர்வு முகமையில் சேர்த்துள்ளது.
2) தேசிய தேர்வு முகமையின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளின் வினாத்தாள்களைச் சரிபார்க்க 4 அடுக்கு பாதுகாப்புடன் கூடிய புதிய சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்படவுள்ளது.
3) தேசிய தேர்வு முகமை அலுவலகங்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
4) தேசிய தேர்வு முகமையின் அலுவலகம் ஒக்லாவிலிருந்து மின்டோ சாலைக்கு மாற்றப்படுகிறது.
5) சைபர் பாதுகாப்பு, வினாத்தாள் வடிவமைப்பு போன்றவற்றிக்கு தனியார் நிறுவனங்களிலிருந்து நிபுணர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.
6) தேர்வு நடைமுறைகளை முழுமையாக தணிக்கை செய்து, தேசிய தேர்வு முகமை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
7) ரகசிய செயல்பாடுகள், சாதனங்கள் வைக்கும் நெறிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.