எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு எதிர்ப்பு… நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டம்
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டம்
Published on

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) விவகாரத்தை எதிா்க்கட்சிகள் எழுப்பி தொடா் அமளியில் ஈடுபட்டன.

எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இரண்டாம் நாள் கூட்டத்தொடர் தொடங்குவதற்குமுன்னதாக, எஸ்ஐஆர் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை நிறுத்துக, வாக்குத் திருட்டை நிறுத்துக போன்ற பதாகைகளுடன் முழக்கங்கள் எழுப்பி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் கலந்துகொண்டனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com