பிரகலாத் ஜோஷி
பிரகலாத் ஜோஷி

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தேதி அறிவிப்பு!

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் 3ஆவது வாரம் தொடங்கி டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக முடிவடையும். ஆனால், தற்போது 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்துவருவதால், அரசியல் கட்சிகள் தேர்தலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் முடிவுகள், டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக உள்ளன.

இந்த நிலையில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தத் தொடரில் மொத்தம் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com