இந்தியா
கேரள மாநிலத்தில் உள்ள வைக்கத்தில் சுதந்திரத்துக்கு முன்னர் சாதியத் தீண்டாமையை எதிர்த்து பெரியார் போராட்டம் நடத்தி நூறாண்டுகள் ஆகின்றன. அதையொட்டி அவர் அங்கு பங்கேற்றதன் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு இன்று மீண்டும் திறந்துவைக்கப்பட்டது.
அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முன்னிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இதைத் திறந்துவைத்தார்.