வாக்குப் பதிவு செய்ய வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்
வாக்குப் பதிவு செய்ய வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்

4ஆம் கட்டத் தேர்தல்: 96 தொகுதிகளில் விறுவிறு வாக்குப் பதிவு!

நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 10.35 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19ஆம் தேதியும், 2ஆம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. 3ஆம் கட்டமாக 93 தொகுதிக்கு கடந்த 7ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து 4ஆவது கட்டமாக, 96 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 10.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகபட்சமாக ஜார்க்கண்டில் 11.78 சதவிகிதமும் மராட்டியத்தில் 6.45 சதவிகிதம் பதிவாகியுள்ளன.

மேலும், ஆந்திர சட்டமன்ற தேர்தலில் 9 மணி நிலவரப்படி 9.21 சதவிகித வாக்குகளும், ஒடிசா சட்டப்பேரவை முதல் கட்ட தேர்தலில் 9.25 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com