
அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ராக்ஸ்டார் கேம்ஸ் எனும் நிறுவனம் ஜி.டி.ஏ. - 6 என்ற விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ஜி.டி.ஏ. - 5 விளையாட்டு, பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஜி.டி.ஏ. - 6 இன்று வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் இதற்குப் பலத்த வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியப் பிரதமரும் இந்த டிரெண்டில் இணைந்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியா இருந்த நிலையையும், தற்போதைய நிலையையும் ஜி.டி.ஏ. - 5, 6 ஆகிய இரண்டு வெர்சன்களுக்கு இடையே இந்தியாவின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
அவர் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட 10 நிமிடங்களில் 60,000 லைக்குகள், 2,000 கமெண்ட்டுகளை அள்ளியது.
கடந்த 2013ஆம் ஆண்டு, இந்தியாவின் பொருளாதார நிலை, வறுமை, சுகாதாரம், சூரிய எரிசக்தி பயன்பாடு, விண்வெளி நிகழ்வுகள், மின்சாரம், இணைய வசதி, உலக நாடுகளுக்கு தற்காப்பு பொருட்களை ஏற்றுமதி செய்தல், நக்ஸலைட்டுகள் இல்லாத நாடாக மாறுதல் ஆகியவற்றை ஜி.டி.ஏ. - 6 விளையாட்டின் திரையில் வரும் காட்சியைப் போலவே, இந்தியாவின் முன்னேறிய நிலையை பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜி.டி.ஏ. - 6 விளையாட்டிற்கு உலகளவில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா முதன்மையானதாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.