பிரதமர் மோடி
பிரதமர் மோடி

திருப்பத்தூர் விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமரும் நிவாரணம் அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசும் நிவாரணம் அறிவித்துள்ளது.

நாட்டறாம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சராகி நின்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதியதில் 7 பெண்கள் உயிரிழந்தனர்; 14 பெண்கள் படுகாயமடைந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் சாலை விபத்தில் 7 பேர் உயிர் இழந்தது வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உதவித்தொகையாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com