பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மோடி மீண்டும் வாரணாசியில் போட்டி- பா.ஜ.க. முதல் பட்டியலில் 195 வேட்பாளர்கள்!

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் முதல் பட்டியலை வெளியிட்டு பா.ஜ.க. முந்திக்கொண்டுள்ளது. 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே சற்று முன்னர் வெளியிட்டார். 

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடுகிறார். 

இந்த மாநிலத்தின் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும், குஜராத்தின் 26 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும், ம.பி.யின் 29இல் 24 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, போர்பந்தர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் போட்டியிடுகிறார்.

உ.பி.யில் மதுராவில் ஹேமமாலினியும் அமேதி தொகுதியில் ஸ்மிரிதி ரானியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா இராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியில் போட்டியிடுகிறார்.

கேரள மாநிலம் திருச்சூரில் நடிகர் சுரேஷ்கோபியும், திருவனந்தபுரத்தில் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் போட்டியிடுகின்றனர்.

மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சராக இருந்து இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாத சிவ்ராஜ் சிங் சௌகான், மக்களவைத் தேர்தலில் விதிசா தொகுதியில் போட்டியிடுகிறார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com