நாட்டின் பதினெட்டாவது மக்களவை இன்று கூடியது.
இந்த முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பும் தொடங்கியது.
பிரதமர் மோடி முதலாமாவராகப் பதவியேற்றார். தற்காலிக அவைத்தலைவர் பர்த்ருகரி மகதாப் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
அப்போது, இராகுல்காந்தி முதலிய எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசமைப்புச்சட்டப் புத்தகத்தை கையில் ஏந்தியபடி எழுந்துநின்றனர்.
முன்னதாக, அவைக்குச் செல்வதற்கு முன்னரே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அரசமைப்புச் சட்டப் புத்தகத்தைக் கையில் பிடித்தபடியே சென்றனர்.
இதனிடையே, பதவியேற்புக்கு முன்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், புதிய உறுப்பினர்களை வரவேற்றதுடன், ஜூன் நாளை 25ஆம் தேதி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பகுதியும் சுக்குநூறாகக் கிழிக்கப்பட்டு நாடு சிறைச்சாலையாக மாறியது; 50ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த அப்படியான சம்பவம் மீண்டும் நிகழக்கூடாது என நாட்டு மக்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.