குடியரசுத்தலைவர் முர்மு - பிரதமர் மோடி
குடியரசுத்தலைவர் முர்மு - பிரதமர் மோடி

பதவிவிலகிய மோடி இடைக்காலப் பிரதமர் ஆனார்!

மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அடுத்த ஆட்சி அமைக்கப்போவது யார் எனும் கேள்வி எழுந்தது. ஆளும் பா.ஜ.க. கூட்டணியிலும் எதிரணியான இந்தியா கூட்டணியிலும் இன்று தீவிர ஆலோசனை நடைபெறுகிறது. 

இந்த நிலையில், சம்பிரதாயமாக கடந்த 17ஆவது மக்களவையின் அமைச்சரவையைக் கலைக்கும்படியும் தன் அமைச்சரவை பதவிவிலகுவதாகவும் பிரதமர் மோடி முறைப்படி அறிவித்தார். 

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்ற் முற்பகல் அவரைச் சந்தித்த மோடி, அதிகாரபூர்வமாக அவரிடம் இதைத் தெரிவித்தார். 

அப்போது, புதிய அமைச்சரவை பதவியேற்கும்வரை இடைக்காலமாக பராமரிப்பு அரசாங்கமாகத் தொடரும்படி குடியரசுத் தலைவர் முர்மு மோடியிடம் கேட்டுக்கொண்டார். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.  

பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும் உடனிருந்தார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com