பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மே 14 இல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்!

வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி மே 14ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல் 2 கட்ட வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் இந்த முறையும் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.

வாரணாசி தொகுதிக்கு ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி மே 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் என்று வாரணாசி பா.ஜ.க. நகரத் தலைவர் வித்யாசாகர் ராய் இன்று தெரிவித்துள்ளார்.

மேலும், மே 13 ஆம் தேதி வாரணாசியில் மோடி வாகனப் பேரணி நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராயும், பகுஜன் சமாஜ கட்சி சார்பில் அதர் ஜமால் லரியும் களம் காண்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com