தலைமைத் தேர்தல் ஆணையர் இராஜீவ்குமார், புதிய தேர்தல் ஆணையர்களுடன்
தலைமைத் தேர்தல் ஆணையர் இராஜீவ்குமார், புதிய தேர்தல் ஆணையர்களுடன்

மக்களவைத் தேர்தல் தேதி நாளை பிற்பகல் 3 மணிக்கு அறிவிப்பு- தலைமைத் தேர்தல் ஆணையம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி விவரத்தை நாளை பிற்பகல் 3 மணியளவில் அறிவிப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். 

புதிய தேர்தல் ஆணையர்கள் ஞானேஸ்குமார், சுக்பீர்சிங் சாந்து ஆகியோர் இன்று பதவியேற்றுக்கொண்டதை அடுத்து, இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய ஆணையர்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் இராஜீவ்குமார் வெளியிடும் அறிவிப்பை, நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுடன், ஆந்திரம், ஒடிசா, சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி பதவிவிலகியதால் ஏற்பட்ட காலியிடத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவும் வாய்ப்பு உண்டு.

ஏழு அல்லது எட்டு கட்டங்களாக இந்தத் தேர்தல் நடத்தப்படக்கூடும் என தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com