புதுச்சேரியில் பொங்கல் பரிசு அறிவிப்பு!

புதுச்சேரியில் பொங்கல் பரிசு அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையையொட்டி புதுச்சேரியில் சிவப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்கு குறிப்பில், புதுச்சேரியில் ஒருநபர் கொண்ட ரேஷன் அட்டைகளுக்கு ரூ.500, இரண்டுக்கு மேற்பட்டோர் உள்ள குடும்பங்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும்.

புதுவையில் உள்ள 1,30,791 குடும்பங்களுக்கு ஜனவரி 4ஆம் தேதி நேரடியாக வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.

ஏழைகளுக்கு இலவச துணை வங்கம் திட்டதின்கீழ் தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.12.29 கோடி அரசு செலவிடுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com