போர்ட் பிளேர் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு- அமித் ஷா தகவல்!

Amit sha
அமித் ஷா
Published on: 

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை மாற்ற மைய அரசு முடிவுசெய்துள்ளது.

மைய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவிஜயபுரம் எனப் பெயரை மாற்றுவதாகவும் அவர் தன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

காலனிய ஆட்சியின் குறியீடாக இருக்கும் பெயர்களை மாற்றியமைக்க வேண்டும் என மோடி தலைமையிலான மைய அரசு தொடர்ந்து கூறிவருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட போர்ட் பிளேரின் பெயரை மாற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளது.