பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

ஆபாச வீடியோக்கள் சர்ச்சை... விசாரணை அறிவித்த அரசு... தேவகவுடா பேரன் தப்பி ஓட்டமா?

ஆபாச வீடியோக்கள் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 26ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சரும், ஜே.டி(எஸ்) தலைவருமான ஹெச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா காங்கிரஸின் ஷ்ரேயாஸ் எம்.படேலை எதிர்த்துப் போட்டியிட்டார். கர்நாடகாவில் ஜே.டி(எஸ்) பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கிறது.

இந்த நிலையில், தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு, பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்கள் இணையத்தில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே, பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் பெங்களூரிலிருந்து ஜெர்மனுக்கு போய்விட்டதாக கூறப்படுகிறது.

மேலும், ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக தேவகவுடா குடும்பம் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் தருவதாகவும் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com