மன் கி பாத் நிகழ்ச்சியில் எழுத்தாளர் சிவசங்கரி, ஆய்வாளர் அ.கா.பெருமாளை பாராட்டிப் பேசிய பிரதமர் மோடி
மன் கி பாத் நிகழ்ச்சியில் எழுத்தாளர் சிவசங்கரி, ஆய்வாளர் அ.கா.பெருமாளை பாராட்டிப் பேசிய பிரதமர் மோடி

மன் கி பாத்: தமிழ் எழுத்தாளர்கள் இரண்டு பேரை பாராட்டிப் பேசிய பிரதமர்!

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர் சிவசங்கரி, ஆய்வாளர் அ.கா.பெருமாள் இருவரையும் பாராட்டி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி இன்று 106-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அதில், தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர் சிவசங்கரி, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா.பெருமாளின் எழுத்துப் பணியை பாராட்டி பேசியுள்ளார்.

இருவர் குறித்தும் பிரதமர் மோடி பேசியதாவது, “தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி இலக்கியம் மூலம் Knit India என்ற இயக்கத்தை உருவாக்கியுள்ளார். இது இலக்கியத்தின் மூலம் நாட்டை இணைப்பதாகும். இதற்காக அவர் கடந்த 16 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அவர் 18 இந்திய மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்களை மொழிபெயர்த்துள்ளார்.

இதேபோல கன்னியாகுமரியைச் சேர்ந்த எழுத்தாளர் அ.கா.பெருமாளின் பணிகள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் கதை சொல்லும் பாரம்பரியத்தை அவர் பாதுகாத்து வருகிறார். இந்தப் பணியில் 40 ஆண்டுகளாக அவர் பணியாற்றி வருகிறார்.

சிவசங்கரி, அ.கா.பெருமாளின் முயற்சிகள் அனைவராலும் பாராட்டத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com