பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமரின் தமிழக பயணம் திடீர் ரத்து!

பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சியமைத்தது. மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

இதனிடையே, பிரதமர் மோடி வரும் 20ஆம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியானது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில் வரையிலான வந்தே பாரத் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 20ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வரவிருந்த நிலையில் அவரது பணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தமிழக வருகையின் மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் பயணம் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

logo
Andhimazhai
www.andhimazhai.com