மத்திய அமைச்சர்களுடன் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை: முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்!

மத்திய அமைச்சர்களுடன் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை: முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்!

விவசாயிகள் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் நிலையில், மத்திய அமைச்சர்களுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஸ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதில் பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

விவசாய சங்கங்கள் நாளை நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதேபோல், பஞ்சாபில் உள்ள சுங்கச்சாவடிகள் முன்பும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com