ராகுல் காந்தி
ராகுல் காந்தி

வயநாட்டில் மீண்டும் ராகுல்- காங்.-ன் முதல் 39 பேர் பட்டியல்!

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். 

இன்று இரவு வெளியிடப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலில் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. 

தற்போது இராகுல் எம்.பி.யாக உள்ள வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆனி ராஜா வேட்பாளர் என சில நாள்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. 

அதையொட்டி இராகுல் தொகுதி மாறுவார் என பேசப்பட்டது. ஆனால் அவர் இதே தொகுதியில் போட்டி என அறிவித்திருப்பது அரசியல் அரஙகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இன்றைய காங்கிரஸ் பட்டியலில் மொத்த 39 வேட்பாளர்களில் கேரளத்தில் 17 பேர் இடம்பெற்றுள்ளனர். 

சத்திஸ்கரில் 6, கர்நாடகத்தில் 7, தெலங்கானாவில் 4 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com