ராகுல் காந்தி
ராகுல் காந்திகோப்பகப் படம்

பிரஜ்வாலுக்குப் பிரச்சாரம்- மோடி மன்னிப்பு கேட்கவேண்டும்: இராகுல்

கர்நாடக எம்.பி.யும் ஹசன் தொகுதி பா.ஜ.க. அணி வேட்பாளருமான பிரஜ்வால் ரேவண்ணாவுக்காகப் பிரச்சாரம் செய்த  மோடியும் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று இராகுல்காந்தி கூறியுள்ளார். 

சிமோகா தொகுதியில் பிரச்சாரம் செய்த இராகுல்காந்தி, 400 பெண்களிடம் வன்கொடுமை செய்த ஒரு குற்றவாளியை ஆதரித்து பிரச்சாரம் செய்தவர்கள் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுமாக மட்டுமே இருப்பார்கள் என்றும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இவர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்றும் காட்டமாகக் கூறினார். 

மேலும், இதற்காக நாட்டின் பெண்கள் அனைவரிடமும் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இராகுல் வலியுறுத்தினார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com