தில்லியில் நேற்று போராட்டத்தில் பங்குபெற்ற மாணவர்களை போலீசார் தாக்கியதற்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே உட்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் பிரதமரின் இல்லத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதாப் பதவி விலக வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மாணவர்கள் டெல்லியில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டக்காரர்கள் நேற்று போராட்டம் நடத்த முயன்றபோது, போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.
இதனை எதிர்த்து பிரதமர் மோடி, கல்வி அமைச்சர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என முழங்கியபடி பிரதமரின் வீடு நோக்கி காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.கள் பேரணியாகச் சென்றனர்.
பின்னர், பிரதமரின் வீட்டு முன்பு அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்களின் மீது வன்முறையை ஏவியதற்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று முழக்கமிட்டு வருகின்றனர்.
முன்னதாக, வன்முறையில் காயமடைந்த மாணவர்களை ராகுல் காந்தி மருத்துவமனையில் சந்தித்தார்.