தில்லி போலீஸ் நிலையத்தில் ராகுல் தர்ணா- பெல்லட் தாக்குதலுக்கு கேஸ் பதிய...!

தில்லி போலீஸ் நிலையத்தில் ராகுல் தர்ணா- பெல்லட் தாக்குதலுக்கு கேஸ் பதிய...!
Published on

காங்கிரஸ் முன்னாள் தலைவர் இராகுல்காந்தி நாடாளுமன்றத் தெரு காவல்நிலையத்தின் முன்பு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கரப்பான் பூச்சி ஜனநாயகக் கட்சியினரின் போராட்டத்தில் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட இளைஞரின் பாதிப்பு தொடர்பாக, இன்னும் முதல் தகவல் அறிக்கைகூட பதியவில்லை எனக் கூறி, அதை உடனடியாக செய்யவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஜூலை 20 ஜந்தர் மந்தர் போராட்டத்தில் நிகழ்ந்த அந்தக் கொடுமையில் பாதிக்கப்பட்ட சாகில் லோச்சாப் எனும் இளைஞருடன் வந்த இராகுல் காந்தி, முதலில் மந்திர் மார்க் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையைப் பதியுமாறு கோரினார்.

அவருடைய கோரிக்கை ஏற்கப்படாததால், பின்னர் அங்கிருந்து நாடாளுமன்றத் தெரு காவல்நிலையத்துக்கு இராகுல் சென்றார். காவல்துறை துணை ஆணையரிடம் அவர் முறையிட்டார்.

அவருடன் பேசியபிறகும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இராகுல்காந்தி அங்கு தர்ணாவில் ஈடுபட்டார்.

பாதிக்கப்பட்ட லோச்சாபுக்கு பெல்லட் குண்டுகளால் கண்ணிலும் அடிவயிற்றிலும் காயங்கள் ஏற்பட்டு, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்- எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com