தில்லியில் போராட்டம் நடக்கும் நாளில் ராகுல் சென்னையில்!

CJP Co-Convenor Saurav Das
கரப்பான் கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் செளரவ் தாஸ்
Published on: 

தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரம் தொடர்பாக கரப்பான் கட்சியினரும் மாணவர், இளைஞர்களும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடத்திவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, தில்லியில் வரும் 10ஆம் தேதி ஜந்தர் மந்தரில் பெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 

இதையொட்டி பெங்களூரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பிரபல சமூக ஊடகக் கருத்தாளர் துருவ் ரத்தீயும் நடிகர் பிரகாஷ் ராஜும் கலந்துகொண்டனர். 

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தியோ தலைநகரில் போராட்டம் நடக்கும்வேளையில், சென்னையில் காங்கிரஸ் சார்பில் மாணவர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி என இங்கு வருகிறார். 

முன்னதாக, கடந்த முறை ஜந்தர் மந்தரில் கரப்பான் கட்சியினரின் தலைமையிலான போராட்டத்தின்போது, அதில் கலந்துகொள்ளாமல் திடீரென இரவு நேரத்தில் தனியாக ஊர்வலம் சென்று ஸ்டண்ட் அடித்தார் இராகுல் என்று பரவலான விமர்சனங்கள் எழுந்தன. 

logo
Andhimazhai
www.andhimazhai.com