தெலங்கானா, முலுகுவில் காங்கிரஸ் கூட்டத்தில் இராகுல், பிரியங்கா காந்தி
தெலங்கானா, முலுகுவில் காங்கிரஸ் கூட்டத்தில் இராகுல், பிரியங்கா காந்தி

தெலங்கானா தேர்தல் - பி.ஆர்.எஸ். மீது ராகுல், பிரியங்கா கடும் சாடல்!

சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டுள்ள தெலங்கானா மாநிலத்தில் ஆளும் பாரதிய ராஷ்டிரிய சமிதி மீது காங்கிரஸ் கட்சி கடும் போக்கை வெளிபடுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று தெலங்கானா தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவைத்தனர். மாநில அளவிலான பேருந்துப் பயணத்தையும் இருவரும் முலுகு மாவட்டத்திலிருந்து ஆரம்பித்து வைத்தனர்.

கூட்டத்தில் பேசிய இராகுல்காந்தி, ” தெலங்கானாவில் பி.ஆர்.எஸ். ஆட்சிக்கு வரவேண்டுமென பா.ஜ.க. விரும்புகிறது. இரண்டு கட்சிகளுக்கும் இடையே மறைமுக ஒப்பந்தம் இருக்கிறது. சந்திரசேகர் ராவுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை விசாரணை உண்டா? நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இந்தக் கட்சி நடந்துகொள்கிறது. மூன்று சட்டங்களில் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக பி.ஆர்.எஸ். வாக்களித்தது.” என்று பேசினார்.

பிரியங்கா பேசுகையில், பி.ஆர்.எஸ். அரசாங்கத்தை பிரதமர் மோடி இயக்குவதாகவும், ரங்காரெட்டி மாவட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்றும் மணல் கொள்ளையர்களை சந்திரசேகர் ஆட்சி பாதுகாக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com