அசோக் கெலாட்
அசோக் கெலாட்

நைட் கிளப்களில் போதைப் பொருட்கள்- அசோக் கெலாட் வருத்தம்

நைட் கிளப் எனப்படும் இரவு நேர விடுதிகளில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துவிட்டது என்றும் இளம் வயதினர் இரவு முழுவதும் அங்கு அப்படி என்னதான் செய்வார்களோ தெரியவில்லை என்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வருத்தத்துடன் பேசியுள்ளார்.

இந்தப் பிரச்னை மாநிலத்தைப் பீடித்திருக்கும் பெரும் துன்பமாக மாறியுள்ளது; இதை எங்கள் அரசு முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.

உலக இளைஞர் நாள் விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், அசோக் கெலாட் இதைத் தெரிவித்தார்.

சில வாரங்களாக ராஜஸ்தான் முழுவதும் இரவு நேர விடுதிகளிலும் ஹூக்கா பார்களிலும் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். தலைநகர் ஜெய்ப்பூர் உட்பட்ட பல நகரங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல சட்டவிரோத போதைப்பொருள் விடுதி உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டனர். பல இடங்களில் சிறுவர்களுக்கு மது விற்பனை செய்ததும், போதைப்பொருட்கள் விநியோகம் மையமாக வைத்து நடந்திருப்பதும் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதை விவரித்த அசோக் கெலாட், “ இரவு 12 மணிக்கு விடுதிகள், ஹூக்கா பார்களில் நுழையும் இளம் ஆண்களும் பெண்களும் விடியும்வரை ஆட்டம், குடி, போதைப்பொருள் பழக்கம் என பொழுதைக் கழிக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.” என்றும் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com