குடியரசுத் தலைவரிடம் ஒரே நாடு ஒரே தேர்தல் குழு அறிக்கை
குடியரசுத் தலைவரிடம் ஒரே நாடு ஒரே தேர்தல் குழு அறிக்கை

முர்முவிடம் ஒரே நாடு ஒரே தேர்தல் குழு அறிக்கை- சட்ட மன்றங்களுக்கும் தேர்தலா?

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக மைய அரசால் நியமிக்கப்பட்ட இராம்நாத் கோவிந்த் குழுவின் அறிக்கை, இன்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கப்பட்டது.

குழுவின் தலைவரும் குடியரசு முன்னாள் தலைவருமான இராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, 18 ஆயிரத்து 626 பக்கங்களைக் கொண்ட விரிவான அறிக்கையை வழங்கியது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி அமைக்கப்பட்ட இந்தக் குழு, தன் அறிக்கையை வழங்குவதற்கு 191 நாள்களை எடுத்துக்கொண்டது. 

இன்று காலையில் குடியரசுத்தலைவர் மாளிகையில் முர்முவைச் சந்தித்து, கோவிந்த் குழுவினர் அறிக்கையை வழங்கினர்.  

முன்னதாக, கடந்த ஆண்டு இந்தக் குழு நியமிக்கப்பட்டபோது, மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரு சேரத் தேர்தல் நடத்தப்படலாம் என பேசப்பட்டது. ஆனால் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டால், அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்ட மாநிலங்கள், ஆட்சிக்காலம் முடிவடைய சில ஆண்டுகள் இருக்கும் மாநிலங்கள் ஆகியவற்றில் எப்படியான முடிவை எடுப்பது என்பதில் கேள்விகளும் அதையொட்டி குழப்பமும் எழுந்தது. 

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கோவிந்த் குழுவின் அறிக்கை தாக்கல்செய்யப்பட்டிருப்பது மீண்டும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com