ராமர் கோயிலுக்கு செல்லும் வழியில் போடப்பட்டுள்ள விளக்குகள்
ராமர் கோயிலுக்கு செல்லும் வழியில் போடப்பட்டுள்ள விளக்குகள்

ராமர் கோயில்...ரூ. 50 லட்சம் மதிப்பிலான விளக்குகள் திருட்டு!

Published on

அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லும் பக்தி பாதை மற்றும் ராமர் பாதையில் போடப்பட்டிருந்த ரூ. 50 லட்சம் மதிப்பிலான மின் விளக்குகள் திருடப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலின் திறப்பு விழா கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோயிலின் மேற்கூரை கசிவதாக தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், ராமர் கோயிலுக்கும் செல்லும் பக்தி பாதை மாற்றும் ராமர் பாதையில் போடப்பட்டிருந்த ரூ. 50 லட்சம் மதிப்பிலான விளக்குகள் திருடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ராம ஜென்ம பூமி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரில்:

6,4000 மூங்கில் விளக்குகள் மற்றும் 96 ப்ரொஜெக்டர் விளக்குகள் போடப்பட்டன. மார்ச் 19 வரை எல்லா விளக்குகளும் இருந்தன. ஆனால், மே 9ஆம் தேதி ஆய்வு செய்தபோதுதான் சில விளக்குகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை 3,800 மூங்கில் விளக்குகள் மற்றும் 36 ப்ரொஜெக்டர் விளக்குகள் திருடப்பட்டுள்ளன.

கடந்த மே 9ஆம் தேதி விளக்குகள் காணாமல்போனதாகக் கண்டறியப்பட்டாலும், ஆகஸ்ட் 9ஆம் தேதிதான் திருட்டு தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com