ஒருவழியாக இரவீந்திர ஜடேஜாவும் பா.ஜ.க.வில் சேர்ந்தார்!
கிரிக்கெட் ஆட்டக்காரர் இரவீந்திர ஜடேஜாவும் ஒருவழியாக பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருடைய மனைவியும் பா.ஜ.க.வின் குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினரான ரிவாபா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
ரிவாபா கடந்த 2019இல் பா.ஜ.க.வில் சேர்ந்தார். பின்னர் 2022ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு ஆம் ஆத்மி வேட்பாளரைத் தோற்கடித்து எம்.எல்.ஏ.வாக ஆனார்.
கடந்த ஜூனில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வென்றதை அடுத்து, டி20 போட்டிகளிலிருந்து விலகுவதாக இரவீந்திர ஜடேஜா அறிவித்திருந்தார். அப்போதே அரசியலுக்காகத்தான் அவர் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில், இன்று ரிபாவா தன் சமூக ஊடகப் பக்கங்களில் தன்னுடைய பா.ஜ.க. உறுப்பினர் அட்டையையும் இரவீந்திர ஜடேஜாவின் அட்டையையும் வெளியிட்டார்.